Welcome to Kaattaru!

It is my long desire to publish a book of my poems. But due to some reasons, I am still not able to do it. So I have decided to post it in this blog. In this First attempt I am posting about 50 Tamil poems written by me in the mid and late 90s. 
I am also open to any publisher request to publish my poems as a book

Friday, May 11, 2018

சுத்தம் செய்வதே இனி வேலை

கடல் நீர் உப்பென்றால்
கரை கண்ணீராய் கரைவதா

சூரியனே குளித்தெழும் கடலில்
குப்பைகள் மிதப்பதா

அள்ளிக் கொடுக்கும்
கடல் மாதா மடியில்
அசுத்தங்கள் விதைப்பதா

இயற்கை கொடுத்த வரத்தை
இழிவு செய்வதா

இது குற்றம் சொல்லும் வேளை அல்ல
சுத்தம் செய்யும் வேளை - கடற்கரைகளை
சுத்தம் செய்வதே இனி வேலை

Thursday, October 1, 2009

உன்னை போல் ஒருவன் ...!

உன்னை போல் ஒருவன் ... ஒரு திரைப் படமாக மட்டும் என்னால் இதை பார்க்க முடியவில்லை. ஒரு மொட்டை மாடியையும், ஒரு போலீஸ் அலுவலகத்தையும் மட்டும் வைத்துக் கொண்டு இவ்வளவு அழகாக கதை சொல்ல முடியும் என்று யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது.. !
இந்த படத்தைப் பார்த்தவுடனேயே இதைப் பற்றி குறைந்தது நான்கு வரிகளாவது கவிதையாய் எழுத வேண்டும் என்று தோன்றியது...
இதோ உங்களுக்காக அந்த கவிதை ...

இது ஒரு ஆடு சிங்கமான கதை !!
பசு வேடமிட்ட நரிகள்
புலி என பாய்ந்தன புள்ளி மான் கூட்டத்திலே - அதை
பலி கொண்டுவிடேவே
அங்கே ஒரு ஆடு
சிங்கமாய் ஆன கதை !!!

தேடிப் பாருங்கள்
உங்கள் வீட்டு மொட்டை மாடி
தண்ணீர் தொட்டிகளில் ...
தண்ணீருக்குப் பதிலாய்
கண்ணீர் கதைகளும் வரலாம் . ..!

Friday, August 14, 2009

கானகம்

இவள்
வானம் வாங்கி வந்த வரத்தால்
பூமித்தாய் பெற்றெடுத்த புண்ணிய மகள் !
பிறந்த வீட்டைப் பெருமைப் படுத்த
மழை தட்சணை கொண்டுவரும் மங்கை !

சீறி வரும் சிங்கம் கூட
மங்கை இவள் மடியில் சரணடையும் !

பலம்கொண்ட யானைகளும், பவ்யமான மான்களும்
பழம்தின்னும் அணில்களும், அலங்கார மயில்களும்
கானக் குயில்களும் இவள் சொந்தம் !
உலகம் முழுவதற்க்கும் இவளோர் பந்தம் !

வண்ண வண்ண வாச மலர்கள் - இவள்
கூந்தலில் அமர்ந்து வாசம் வீசும் !

துள்ளிக் குதிக்கும் வெள்ளை அருவி - இவள்
கழுத்தில் தொங்கும் முத்து மாலை !

பாய்ந்து செல்லும் காட்டாறு இவள்
மேனியில் தவழும் வெண் பட்டாடை - இவள்
கால் வைத்து நிற்ப தெல்லாம்
பச்சைப் பசேல் பட்டுப்புல் கம்பளத்தில்தான் !

இத்துணை இனிமைகள் இவளிடம் இருந்தும் இவளின் நிலையோ அந்தோ பரிதாபம் தான்! வாரி வாரிக் கொடுத்தாலும் இவள் வாழ்வைக் கெடுக்கும் வஞ்சக ராகிவிட்டோம்! சோகம் இவள் சோகம் தீர்க்காவிடில் சாபம் நமக்கிடுவாள், சமாதிகள் ஆகிவிடுவோம் !!

Tuesday, June 9, 2009

விஜய் டீவீயில் ரசித்த கவிதை !!

என் ஆயுள் உள்ள வரை உன் காதல் வேண்டும் ! இல்லையேல் உன் காதல் உள்ள வரை எனக்கு ஆயுள் போதும் !!

This verse was shown as an advertisement to a new serial to be telecasted soon in Vijay TV! It is very lucid and beautifully written!!

Saturday, May 16, 2009

இளந்தூறலும் மேகமும் !

இரண்டும் இணை பிரியா தோழர்கள் ! 
ஒன்றனுள் மற்றது அடக்கம் ! 
மேகமாய் இருக்கும் வரை - அதனுள் 
தூறல் அடக்கம் !

மின்னல் வந்து கலைத்த பின்னே 
மழை என்று ஆன பின்னே 
தூறலுக்குள் மேகம் அடக்கம் !

மழையென்பது மரணமாகும் ! 
மரணிப்பது இரண்டும் தான் -  
மேகமும் தூறலும் !

மண்ணில் அடக்கமான பின்னும்  
ஆறாகி கடலாகி  
அழியாமல் தானிருக்கும் !

மறுபிறவி இரண்டிற்கும் உண்டு ! 
மண்ணிக்கவும் -  
இங்கே ஓர் பிழை நேர்ந்து விட்டது ! 
மறு பிறவி அல்ல - அது 
தொடர் பிறவி !!

ஆவியாகி மேகமாகி - மீண்டும் 
தூறல் அதனில் அடக்கமாகி . .  
தூறலாகி மண்ணெய்தி  
அழியாமல் தானிருக்கும் !

நட்பிற்கும் இதுதான் இலக்கணம் 
நான் நவின்றதனில் பொய்யில்லை  
உண்மையுண்டு !!!

Meaning of the Title : 
The Drizzle and Cloud

Meaning of the Poem :
Both are close friends !
One contains the other.
Until it is a cloud
It contains the drizzle

Once it is disturbed by lightning
when the cloud becomes rain,
drizzle contain the cloud !

Rain means death !
Which dies are the both -
the cloud and the drizzle

Even it is buried in to the earth
it converts to river and sea or Ocean
hence immortal !!

Both has second birth !!
I peg your pardon here -
There is a mistake happened
It is not second birth - but
continuous incarnations !!

Evaporates to Cloud - Again
drizzle contained into Cloud . .
Convert to rain and become drizzle to
reach the earth . . .
Isn't it continuous incarnations??

This is the discipline for friendship too
Whatever I said is nothing but
truth !!!

Tuesday, February 3, 2009

குழந்தைத் தொழிலாளி

மின்னல் வீச வேண்டிய 
கண்களில்
கண்ணீர் மழை !

Meaning of the Title : 
Child Labour

Meaning of the poem : 
Raining tears in the to be lightning sparky eyes

Note : This is the Japanese Haiku style poem. (Normally it will have 17 words)

Monday, February 2, 2009

போரெனும் போதினிலே ... !

சுற்றும் பூமியும் சுழலும் காற்றும்
நின்றே போய்விடும் - இனி நின்றே போய்விடும்

வளரும் மரமும் புரளும் அலையும்
மறைந்தே போய்விடும் - இனி மறைந்தே போய்விடும்

வீசு தென்றலும் குளிர் பனியும்
புயலாய் மாறிடும் -வெம் புயலாய் மாறிடும் 

போரெனும் அரக்கன் பூமியில் தொடர்ந்தால்
அழிந்தே போய்விடும் - உயிர்க்குலம் அழிந்தே போய்விடும்

அணுவைத் துளைத்தாள் அவ்வை என்றால் - இன்று 
அணுவால் துளைத்தான் நம்மை யெல்லாம் !

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் - ஆனால்
வாய்விட்டு அழுதோம்  போரெனும் நோய் விட்டுப் போக !

சாதிக்கத்தானே நாம் பிறந்தோம் - வீணாய்
சண்டையிட்டு சாவதேன் நமக்குள்ளே ?

நாடென்று ஒரு கோட்டை யார் போட்டது? - அது 
நமக்குள்ளே நாம்தானே போட்டு வைத்தது ....

கோடுகளை அழித்துவிட்டு நாம் கூட்டுவோம் - பல
கோபுரங்கள் காத்திருக்கு நமக்காகவே !