Welcome to Kaattaru!

It is my long desire to publish a book of my poems. But due to some reasons, I am still not able to do it. So I have decided to post it in this blog. In this First attempt I am posting about 50 Tamil poems written by me in the mid and late 90s. 
I am also open to any publisher request to publish my poems as a book

Tuesday, February 3, 2009

குழந்தைத் தொழிலாளி

மின்னல் வீச வேண்டிய 
கண்களில்
கண்ணீர் மழை !

Meaning of the Title : 
Child Labour

Meaning of the poem : 
Raining tears in the to be lightning sparky eyes

Note : This is the Japanese Haiku style poem. (Normally it will have 17 words)

Monday, February 2, 2009

போரெனும் போதினிலே ... !

சுற்றும் பூமியும் சுழலும் காற்றும்
நின்றே போய்விடும் - இனி நின்றே போய்விடும்

வளரும் மரமும் புரளும் அலையும்
மறைந்தே போய்விடும் - இனி மறைந்தே போய்விடும்

வீசு தென்றலும் குளிர் பனியும்
புயலாய் மாறிடும் -வெம் புயலாய் மாறிடும் 

போரெனும் அரக்கன் பூமியில் தொடர்ந்தால்
அழிந்தே போய்விடும் - உயிர்க்குலம் அழிந்தே போய்விடும்

அணுவைத் துளைத்தாள் அவ்வை என்றால் - இன்று 
அணுவால் துளைத்தான் நம்மை யெல்லாம் !

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் - ஆனால்
வாய்விட்டு அழுதோம்  போரெனும் நோய் விட்டுப் போக !

சாதிக்கத்தானே நாம் பிறந்தோம் - வீணாய்
சண்டையிட்டு சாவதேன் நமக்குள்ளே ?

நாடென்று ஒரு கோட்டை யார் போட்டது? - அது 
நமக்குள்ளே நாம்தானே போட்டு வைத்தது ....

கோடுகளை அழித்துவிட்டு நாம் கூட்டுவோம் - பல
கோபுரங்கள் காத்திருக்கு நமக்காகவே !

உழைப்பே உயர்வு

கண்ணுக்குள் கனவாய் 
கவிழ்ந்து கிடந்ததெல்லாம் 
கவினுலகில் நனவாய் 
மாறி ஒளிரட்டும் !

நெஞ்சுக்குள் பாரமாய் 
நிறைந்து கிடந்ததெல்லாம் 
காற்றினில் மூச்சாய் 
கலந்து மறையட்டும் ! 

பஞ்சமில்லை - யாரும் 
பாவமில்லை - பாரதத்தில்
ஏழையென்று ஒருவர் 
எவருமில்லை என்ற நிலை வரட்டும் !

முட்டுக்கட்டை யாய் கிடந்ததெல்லாம் 
ஏணிப்படிகளாய் மாறட்டும் !
பாதை மறைத்த பாறைகளெல்லாம் 
படிக்கற்களாய் மாறட்டும் !

சுற்றி வந்த காற்றும் நமக்குக் 
கட்டுப்பட்டுக் கிடக்கட்டும் !
எடுத்து வைத்த எட்டிலெல்லாம் 
வெற்றிப்பூக்கள் மலரட்டும் !

வியர்வைத் துளிகளால் வந்த வாழ்வு 
விடை பெறாமல் இருக்கட்டும் !
என்றும் வெற்றி நமதாக 
தெய்வம் துணை இருக்கட்டும் !