கண்ணுக்குள் கனவாய்
கவிழ்ந்து கிடந்ததெல்லாம்
கவினுலகில் நனவாய்
மாறி ஒளிரட்டும் !
நெஞ்சுக்குள் பாரமாய்
நிறைந்து கிடந்ததெல்லாம்
காற்றினில் மூச்சாய்
கலந்து மறையட்டும் !
பஞ்சமில்லை - யாரும்
பாவமில்லை - பாரதத்தில்
ஏழையென்று ஒருவர்
எவருமில்லை என்ற நிலை வரட்டும் !
முட்டுக்கட்டை யாய் கிடந்ததெல்லாம்
ஏணிப்படிகளாய் மாறட்டும் !
பாதை மறைத்த பாறைகளெல்லாம்
படிக்கற்களாய் மாறட்டும் !
சுற்றி வந்த காற்றும் நமக்குக்
கட்டுப்பட்டுக் கிடக்கட்டும் !
எடுத்து வைத்த எட்டிலெல்லாம்
வெற்றிப்பூக்கள் மலரட்டும் !
வியர்வைத் துளிகளால் வந்த வாழ்வு
விடை பெறாமல் இருக்கட்டும் !
என்றும் வெற்றி நமதாக
தெய்வம் துணை இருக்கட்டும் !
No comments:
Post a Comment